திருவனந்தபுரம்: மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், மலையாளம் என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், தமிழ்நாட்டின் பழனி பகுதியில் தான் நண்பகல் நேரத்து மயக்கம் படப்பிடிப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தை ரசிகர்கள் வெகுவாக புகழ்ந்து வருகின்றனர். டிவிட்டரில் அவர்கள் தெரிவித்துள்ள விமர்சனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பிக் பாஸ் சீசன் 6: டைட்டில் வின்னர் ரேஸில் விக்ரமன் – அசீம்… மக்கள் தீர்ப்பு யாருக்கு?
நண்பகல் நேரத்து மயக்கம் ரிலீஸ்
மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். 2022ல் பீஸ்மா பர்வம், புழு, ரோர்சாக் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். வெவ்வேறு ஜானரில் வெளியான இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டபுள் பேரல், அங்கமாலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ரசிகர்கள் பாராட்டு
முதன்முறையாக மம்முட்டி – லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூட்டணியில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் உருவாகியுள்ள இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படம் முழுவதும் மம்முட்டி கட்டம் போட்ட அழுக்கு லுங்கி, சட்டை என வித்தியாசமான லுக்கில் நடித்துள்ளார். நண்பகல் நேரத்து மயக்கம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர், கதை, திரைக்கதை என ஸ்க்ரிப்ட் ஒர்க்கில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி அசத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மம்முட்டியின் நடிப்பு பிரமாதம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும், படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக வந்துள்ளன. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு சூப்பர் என பதிவிட்டுள்ளார்.
மம்முட்டியின் மேஜிக்
இன்னொரு ரசிகரும் மம்முட்டியின் நடிப்பை பயங்கரமாக பாராட்டி பதிவிட்டுள்ளார். மம்முட்டியின் நடிப்பு பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஜேம்ஸ், சுந்தரம் என படத்தில் வரும் பாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்டும், அந்த காட்சிகளில் மம்முட்டி நடித்தது குறித்தும் பாராட்டியுள்ளார். அதேபோல் மேலும் ஒரு ரசிகரும் இது மம்முட்டியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம் என புகழ்ந்துள்ளார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் மம்முட்டியும் இணைந்து அற்புதமான திரை அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள பழைய பாடல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
மம்முட்டியின் மேஜிக்
இன்னொரு ரசிகரும் மம்முட்டியின் நடிப்பை பயங்கரமாக பாராட்டி பதிவிட்டுள்ளார். மம்முட்டியின் நடிப்பு பற்றி என்ன சொல்லவென்றே தெரியவில்லை. ஜேம்ஸ், சுந்தரம் என படத்தில் வரும் பாத்திரங்களின் பெயர்களை குறிப்பிட்டும், அந்த காட்சிகளில் மம்முட்டி நடித்தது குறித்தும் பாராட்டியுள்ளார். அதேபோல் மேலும் ஒரு ரசிகரும் இது மம்முட்டியின் மாஸ்டர் பீஸ் திரைப்படம் என புக்ழந்துள்ளார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் மம்முட்டியும் இணைந்து அற்புதமான திரை அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். படத்தில் இடம்பெற்றுள்ள பழைய பாடல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் நன்றி
அதேபோல் நண்பகல் நேரத்து மயக்கம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள இன்னொரு நெட்டிசனும் மம்முட்டியின் நடிப்பு தான் படத்துக்கு பெரிய பலம் என்றுள்ளார். மீண்டும் ஒருமுறை தனது சிறந்த நடிப்பை மம்முட்டி வழங்கியுள்ளார். லிஜோ ஜோஸ்ஸின் டைரக்ஷன், திரைக்கதை அட்டகாசம் என விமர்சனம் செய்து 4.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாவில் மம்முட்டிக்கும் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ், மலையாளம் என இருதரப்பிலும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனமும், நல்ல ரேட்டிங்கும் கிடைத்துள்ளன.
Read more about: mammootty nanpakal nerathu mayakkam ramya pandiyan lijo jose pellissery kollywood malluwood மம்முட்டி நண்பகல் நேரத்து மயக்கம்